அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் பிசினஸ்.. சரண்டர் ஆன தயாரிப்பாளர், காற்றில் பறக்கும் தளபதியின் மானம்

தளபதி விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொள்ள உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகள் இப்போது ஆரம்பித்து விட்டது.

மேலும் கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் மோதிக்கொள்வதால் மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. விஜயின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also Read : சிம்பு மீது காண்டான அஜித், தனுஷை வைத்து போடும் பக்கா பிளான்.. விஜய்யின் வாரிசு படத்தால் வந்த வம்பு

அஜித்தின் துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. வாரிசு படத்தின் வெளியிட்டு உரிமையை லலித் குமார் பெற்றுள்ளார். மேலும் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் உதயநிதி வாரிசு படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்திற்கு தான் தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் உதயநிதியும் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இப்போது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

Also Read : வாரிசுக்கு முட்டுக்கட்டை போட நினைத்த ஷங்கர்.. செக் வைத்த அனுப்பிய தயாரிப்பாளர் தில் ராஜ்

அதாவது தமிழ்நாட்டில் தளபதி விஜய் தான் நம்பர் ஒன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். விஜய்க்கு பிறகு தான் அஜித் இருக்கிறார். இப்படி இருக்கையில் இரு நடிகர்களுக்கும் சமமான தியேட்டர் கொடுப்பது ஒரு சரியான பிசினஸ் இல்லை என்று அவர் கூறியுள்ளார். விஜய்க்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும். மேலும் இது குறித்த உதயநிதியிடம் நேரில் சந்தித்து பேச இருப்பதாக தில்ராஜு கூறியுள்ளார்.

இப்படி தில் ராஜு பேசியது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் விஜய், அஜித் இருவருக்குமே ஒரு மாஸ் ஆடியன்ஸ் உள்ளனர். இந்த சமயத்தில் தில் ராஜு இப்படி பேசி உள்ளதால் அஜித்துக்கு குறைந்த திரையரங்குகள் கொடுக்க சொல்கிறீர்களா என்று அவரது ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். மேலும் படம் வெளியானால் தான் தளபதி நம்பர் ஒன்னா என்பது தெரியும் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : உதயநிதி, விஜய்க்கு இடையே மறைமுகமாக ஏற்பட்ட சண்டை.. வாரிசு மேடையில் பதிலடி கொடுக்க நாள் குறித்த இளையதளபதி