ஷங்கரை அசிங்கப்படுத்திய விஜய் பட தயாரிப்பாளர்.. பட்ஜெட் பிரச்சனையால் வந்த மிரட்டல்

பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் திரையரங்கில் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆன தில்ராஜ் அவர்கள் தெலுங்கு நட்சத்திரம் ராம் சரணை வைத்து பிரம்மாண்டமான படத்தினை தயாரித்து வருகிறார். படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் ஆர்.சி 15 என்ற படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இவர் இயக்கும் படத்தில் ராம் சரண் உடன் பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.

Also Read: வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. துணிவை விட 90 கோடி அதிகமான வசூல்

தற்பொழுது சங்கர் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார். இதனால் ஜெட் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கமல் மற்றும் ராம்சரண் படத்திற்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறார் இருந்தாலும் ஆர்.சி 15 படம் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இப்படத்திற்கு ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட இரு மடங்கு அதிகமாக செலவாகி உள்ளதால் தயாரிப்பாளரான தில்ராஜ் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். இதற்கு மேல் படத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்றால் உங்கள் சொத்தை வித்து தான் செய்ய வேண்டும் என சங்கரிடம் கராராக சொல்லிவிட்டாராம். இதனால் தெலுங்கு படத்தை ஏன் தான் கையில் எடுத்தோமோ என்று ஷங்கர் புலம்பி வருகிறாராம்.

Also Read: மீண்டும் இணையும் வாரிசு கூட்டணி.. தில் ராஜுக்காக எதுவும் செய்யத் துணிந்த விஜய்

இதன் காரணமாக படப்பிடிப்பின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் எடிட்டிங் வேலைகளுக்கு காலதாமதம் ஏற்படும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த வருடம் படத்தை வெளியிட தில்ராஜ் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி  உள்ளது.

இந்நிலையில் சங்கர் படம் என்றால் பிரம்மாண்டமாக தான் இருக்கும் என்பதற்கு போல் சுமார் 1000 கலைஞர்கள் இடம் பெற்றுள்ள பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆனது இடம்பெறுகின்றது. சங்கர் படத்தின் பிரம்மாண்டத்திற்காகவே பட்ஜெட் கொஞ்சம் எகிற தான் செய்யும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Also Read: நம்ப பவர் அந்த ரகம் என கெத்து காட்டிய வாரிசு.. பல கோடிகளில் குவிந்த 10 நாள் கலெக்ஷன்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்