ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என் கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிடீங்களே.. எம்ஜிஆரால் லோகேஷ் மேல் கொல காண்டில் இருக்கும் விஜய்

MGR-Vijay-Lokesh: விஜய்க்கு மட்டும் எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக பிரச்சனைகள் வருகிறதோ தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் இப்போது லியோ பற்றிய சர்ச்சை தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாக்ஸ் ஆபிஸ் மோசடி, மற்றொரு பக்கம் திரையரங்கு உரிமையாளர்களின் கொந்தளிப்பு என பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது.

இந்த சூழலில் எம்ஜிஆரும் தன் பங்குக்கு விஜய் காலை வாரி விட்டிருக்கிறார். அதாவது சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த லியோவுக்கு பதிலாக அவர்கள் எம்ஜிஆர் நடிப்பில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்தை நேற்று முதல் 2 காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதில் என்ன சோகம் என்றால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷின் இப்படம் வெளியான 7 நாட்களிலேயே 52 ஆண்டு பழமையான படத்திற்கு முன் சரிந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் விடுமுறை நாட்கள் முடிந்த பிறகு லியோவுக்கு வரும் பார்வையாளர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது தான்.

ஏற்கனவே பல தியேட்டர்களில் டிக்கெட் புக் ஆகாத காரணத்தினால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதில் எம்ஜிஆரும் லியோவுக்கு ஒரு போட்டியாக வந்திருப்பது நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி நாலா பக்கமும் பிரச்சனைகள் நான் ஸ்டாப்பாக வருவது விஜய்யையும் கலவரப்படுத்தி வருகிறதாம்.

அதிலும் சோசியல் மீடியாவில் அம்புட்டு விஷயமும் உடனுக்குடன் வெளிவந்து கொண்டிருப்பது பட குழுவினரை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனால் விஜய் லோகேஷ் மேல் கொல காண்டில் இருக்கிறாராம். ஏனென்றால் லியோ முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.

அது மட்டுமின்றி லோகேஷ் இரண்டாம் பாதியை கண்டும் காணாமல் விட்டுவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. அதனாலேயே ஆயிரம் கோடி வரை எதிர்ப்பார்க்கப்பட்டு இப்போது லியோ தட்டு தடுமாறி கொண்டிருப்பதாகவும் பேச்சுக்கள் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கௌரவம் கௌரவமுன்னு சொல்லி இப்படி எல்லாத்தையும் குழித் தோண்டி புதைச்சிட்டீங்களே என்பதுதான் இப்போது விஜய்யின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும்.

லியோவால் லோகேஷ் மீது கடுப்பில் இருக்கும் விஜய்.

- Advertisement -

Trending News