சினிமாவை தாண்டி பல தொழில்களில் கல்லாக்கட்டும் தளபதி.. அரசியலுக்கு முன்பே போட்ட ராஜதந்திரம்

விஜய் தான் தற்போது உள்ள டாப் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதுவும் தளபதி 68 படத்திற்கு 200 கோடி விஜய் சம்பளம் பெற உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் சினிமாவை தாண்டி பல தொழில்களில் விஜய் கல்லாக்கட்டி வருகிறார்.

அதாவது விஜய் சிறுவயதில் இருக்கும் போதே அவரது தந்தை எஸ்ஏசி திருமணம் மண்டபம் கட்டியிருந்தார். அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் சுமார் 6 திருமண மண்டபங்களை விஜய் நடத்தி வருகிறார். அடுத்தது சென்னையில் விருகம்பாக்கத்தில் முக்கிய வளாகம் கட்டி தியேட்டர் நடத்தி வருகிறார்.

Also Read : செமையாய் என்ஜாய் பண்ணும் விஜய்.. அந்த 2 பேரால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளையாம்

அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகள் திறக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இது தவிர சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இதே தொழிலை துபாயிலும் தளபதி செய்து வருகிறாராம்.

மேலும் விஜய் தனது தங்கை நினைவாக ஓசூரில் நிர்வாகிகள் மூலமாக கல்விக் கூடங்களை நடத்தி வருகிறார். இதை அதிகரிக்கும் திட்டத்தில் தளபதி செயல்பட்டு வருகிறாராம். இவ்வாறு சினிமாவை தாண்டி நிறைய தொழில்களில் விஜய் முதலீடு செய்து லாபம் பார்த்து வருகிறார்.

Also Read : நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

அதுமட்டுமின்றி விஜய் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்து கொண்டு விளம்பரம்படுத்தாமல் இந்த தொழில்களை செய்து வருகிறார். ஆரம்பத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இவை அனைத்தும் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பல தொழில்கள் அவரது நிர்வாகிகள் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் விஜய் அரசியலுக்கு வந்து கால் ஊன்றிய பிறகு நேரடியாகவே விஜய்யின் பெயரில் நடத்தப்பட இருக்கிறதாம். இதன் மூலம் வெளியில் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ராஜதந்திரமாக பணத்தை சேர்ந்தது வந்து உள்ளார். அரசியலுக்கு வந்த பின்பு இது வெட்ட வெளிச்சமாகவே அனைவருக்கும் தெரியும்படி நடத்த இருக்கிறார்.

Also Read : 234 தொகுதி, 6000 நபர்கள்.. கலைஞர் பிறந்த நாளில் பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்