அஜித்தை விட விஜய் மோசமான வில்லன்.. உண்மையை உளறிக் கொட்டிய ஆதி குணசேகரன்

கோலிவுட்டின் தூண்களான நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவருமே 90 காலக்கட்டத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கென எப்போதும் தனி ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய் மற்றும் அஜித்தின் உண்மையான குணங்களை அறிந்துக்கொள்ள பத்திரிக்கை முதல் ரசிகர்கள் வரை ஆர்வத்துடன் இருப்பர்.

இருவரும் ஆரம்பத்தில் படங்களில் நடிக்க வந்து பல தோல்வி படங்களை கொடுத்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்குமான குணங்கள் சற்று வித்தியாசம் தான். உதாரணமாக அஜித் தனக்கென சிறிய வட்டாரத்தை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருபவர். மேலும் தனக்கு பிடிக்காதவர்களிடம் எப்போதும் சற்று ஒதுங்கியே இருக்க கூடியவர்.

Also Read: விலங்கு பெயரில் வெளிவந்து மண்ணை கவ்விய விஜய்யின் 4 படங்கள்.. தலை தப்புமா லியோ!

ஆனால் நடிகர் விஜய் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பேசி பழக கூடியவர். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்துபவர். சில சமயங்களில் அரசியல் சார்ந்த பேச்சுகளையும் தைரியமாக பேசி, பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வார். இருந்தாலும் எவ்வளவு பெரிய வெற்றி, தோல்வி அவர் வாழ்க்கையில் வந்தாலும், எப்போதும் சாந்தமாக இருக்க கூடியவர்.

அந்த வகையில் விஜய்க்கும், அஜித்துக்கும் உள்ள வில்லத்தனமான குணத்தை பிரபல சீரியல் நடிகர் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வில்லத்தனமான கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அஜித் மற்றும் விஜய் குறித்து பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Also Read: வசூல்ராஜாவை வச்சு செய்த ரிலீஸ்.. என்னடா இது தளபதி விஜய்க்கு வந்த சோதனை

நடிகர் அஜித் யார் மீதாவது கோவமாக இருந்தார் என்றால், உடனே அந்த கோபத்தை வெளிப்படுத்த கூடியவராம். மேலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்கு பட்டதை உடனே மற்றவர்களிடம் சொல்லி விடுவாராம். ஆனால் விஜய் அப்படியில்லையாம், விஜய்க்கு யார்மேலாவது கோபம் வந்தால், அதனை மனதில் வைத்துக்கொண்டு சகஜமாக அவர்களுடன் சிரித்துக்கொண்டே பழகுவாராம்.

பின்னர் ஒரு 4,5 நாட்கள் ஆற, அமர மனதில் சில பிளான்களை எல்லாம் செய்து,  அவர்களை வேறு வழிகளில் பழிக்குப் பழி வாங்குவதில் விஜய் கில்லாடியாம். இவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் குணம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அஜித் போல் மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி சென்று விடுவது தான் ஆரோக்கியமான குணம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ரீ-ரிலீஸ் செய்தால் வசூல் வேட்டையாடும் அஜித்தின் 5 படங்கள்.. இன்றும் ரஜினி ரசித்துப் பார்க்கும் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்