சங்கரை விட பெரிய இயக்குனருக்கு குறிவைத்த விஜய்.. ஏதோ பெரிய பிளான் போடுறாரு!

தமிழ் சினிமாவில் எல்லாம் முன்னணி நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து படம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தளபதி விஜயின் தற்போதைய சினிமா வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அந்தவகையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவை குறிவைத்து அங்குள்ள டாப் இயக்குனர்களில் ஒருவரான வம்சி பைடிபல்லி என்பவருடன் இணைந்து தளபதி அறுபத்தி ஆறு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அட்லி என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்ற நிலையில் தற்போது அவர்களுக்கெல்லாம் டாட்டா காட்டிவிட்டு ஒட்டுமொத்தமாக தெலுங்கு சினிமா இயக்குனர்களுக்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்களை கொடுக்க ஐடியா செய்துள்ளாராம்.

அதுவும் அடுத்ததாக விஜய் பிளான் செய்துள்ள இயக்குனர் உலக சினிமாவே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய இயக்குனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவர் வேறு யாரும் இல்லை நம்ம ராஜமௌலி தான். ஏற்கனவே ராஜமௌலியின் தந்தை விஜயின் மெர்சல் படத்திற்கு திரைக்கதை அமைத்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்போதிலிருந்தே விஜய் மற்றும் ராஜமவுலி இணைந்து படம் செய்யலாம் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

இருந்தாலும் ராஜமவுலி அடுத்தடுத்து படங்களில் பிசியான தான் அந்த முடிவு கைகூடாமல் போய்விட்டது. தற்போது ராஜமவுலி ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) என்ற படத்தை எடுத்து முடித்து வருகின்ற ஜனவரியில் ரிலீஸ் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார் ராஜமவுலி.

இந்த இரண்டு படத்தையும் முடித்து விட்டு அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்புகள் அடுத்த வருட இறுதியில் வெளிவரும் எனவும் தெரிகிறது. விஜய் மற்றும் ராஜமௌலி கூட்டணியை மட்டும் இணைந்துவிட்டால் விஜய் இந்திய அளவில் வசூல் நாயகனாக உயர்ந்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்