தளபதி 67 படத்தில் நான்தான் ஹீரோயின்.. அடித்துச் சொல்லும் சிம்பு பட நடிகை

தளபதி விஜய்யுடன் ஜோடி போட பல இளம் நடிகைகள் ஆசைப்படுகிறார்கள் என்பது சமீப காலமாக பல பேட்டிகளில் பல நடிகைகள் கூறியதன் மூலம் தெரிய வருகிறது. அந்த வகையில் சிம்பு பட நடிகை தளபதி 67 படத்தில் நான்தான் ஹீரோயின் என இப்போதே கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் வருகின்ற பொங்கலுக்கு உலகமெங்கும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படம் உருவாக உள்ளது.

மேலும் தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் பெரும்பாலும் மகிழ்திருமேனி தான் எனவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தளபதி 67 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் கண்டிப்பாக நான்தான் ஹீரோயின் என அடித்துச் சொல்கிறார் சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்.

nidhi-agarwal-cinemapettai
nidhi-agarwal-cinemapettai

நிதி அகர்வால் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் ஈஸ்வரன் படமும், ஹாட்ஸ்டார் தளத்தில் பூமி படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூபில் தளபதி 67 படத்தில் கண்டிப்பாக நான்தான் ஹீரோயின் எனவும், அதற்குள் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக மாறி விடுவேன் எனவும் மிகவும் தைரியமாக நிதி அகர்வால் கூறியுள்ளது இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவின் தற்போதைய கிளாமர் குயின் நிதி அகர்வால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்