செம அழகாக இருக்கும் தளபதி விஜய்.. தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்

மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.

மேலும் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

ஜார்ஜியா நாட்டில் முதல் நாள் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி விஜய்யின் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இடையில் தளபதி 65 படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினர் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்தவகையில் விஜய் ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாஸ்டர் பட கெட்டப்பில் ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதைவிட தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் உலகப் புகழ் பெற்றது போல தளபதி 65 படத்தில் அந்த மாதிரி பாடல் இருக்குமா என்பதுதான்.

thalapathy65-vijay
thalapathy 65-vijay
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்