தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியான தெலுங்கு அழகி.. போடு, மஜா அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ரசிகர்களின் பார்வை தளபதி 65 படத்தின் மீது உள்ளது. ஆனால் அறிவிப்பு வந்ததற்கு பிறகு தற்போது வரை தளபதி 65 படத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை.

இதனால் அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன விஷயங்களை வைத்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தளபதி 65 படத்தின் நாயகி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி 65. தளபதி 65 படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற பேச்சுக்கள் தற்போது இணையதளங்களில் அதிகமாக உள்ளன. ஒரு சிலர் தளபதி 65 படம் சர்கார் படம் போல அரசியல் கதை என்கிறார்கள்.

வேறு சிலர் முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சர் என்கிறார்கள். ஆக மொத்தத்தில் தளபதி 65 படத்தை பற்றிய செய்திகள் தினமும் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அளவுக்கு அதிகமாக இருந்தது.

தெலுங்கு பட சினிமா உலகின் முன்னணி நடிகை தான் விஜய்க்கு ஜோடி என்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் பல நடிகைகளில் அந்த ஒரு நடிகை யார் என்பது ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.

எனவே 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற தோல்வி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி 65 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

pooja-hegde-thalapathy65
pooja-hegde-thalapathy65
- Advertisement -