ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மொத்தமாய் இம்ப்ரஸ் ஆகி விஜய் செய்த வேலை.. தயாரிப்பாளர் அடிமடியில் கைவைத்து பெத்த தொகையை வாரி வழங்கிய தளபதி

லியோ படத்தில் இரண்டு பேர் வேலையை பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆகியுள்ளார் தளபதி விஜய். படம் எப்படி வந்தாலும் பரவாயில்லை இவர்களது வேலை செமையாக இருக்கிறது என்று மொத்தமாய் அவர்களை வளைத்து போட்டு அவர்களுக்கு ஒரு பெத்த சம்பளத்தையும் கொடுத்திருக்கிறார் தளபதி.

லியோ படம் இரண்டு மணி நேரம் என்றால் அதில் ஒரு மணி நேரம் சண்டை காட்சிகள் மட்டுமே .சண்டை காட்சிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. இந்த சண்டைக் காட்சிகளை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார் விஜய். அந்த காட்சிகள் அனைத்தையும் டைரக்ட் செய்தது அன்பு அறிவு மாஸ்டர்ஸ்.

ஒரு கட்டத்தில் விஜய் இவர்கள் கூட இருந்தால் போதும் ஆக்சன் காட்சிகளில் கலக்கி விடலாம் என மொத்தமாய் அவர்கள் இருவரையும் படம் முழுவதும் தன் கைவசமே வைத்துக் கொண்டாராம். படத்தில் சண்டை மட்டுமல்லாது ஓடுவது, ஆடுவது போன்ற இடத்திலும் இவர்களுக்கு பெரும் பங்கு கொடுத்திருக்கிறார்.

பொதுவாக ஓடிப்போய் ஒரு காரை பிடிப்பது, போன்ற சின்ன சின்ன காட்சிகளுக்கு கூட இவர்களை கூட வைத்துள்ளார் தளபதி. அதன் காரணமாக அவர்களுக்கு ஒரு பெத்த தொகையையும் சம்பளமாக வாங்கிக் கொடுத்துள்ளார். சகோதரர்களாகிய அன்பறிவு மாஸ்டர்களுக்கு மொத்தமாக 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக படத்தில் மற்றும் ஒரு முக்கிய பங்காளராக இருந்தவர் அனிருத். அவருக்கு இந்த படத்தில் சம்பளம் 5 கோடி ரூபாய். இதை வைத்து இப்பொழுது தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார் அனிருத். அடுத்த படத்திற்கு அவர் டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திவிட்டார் . இனிமேல் அனிருத்தை புக் செய்ய வருபவர்களிடம் 10 கோடி நிர்ணயிக்கிறார்.

படத்தின் பட்ஜெட்டை மொத்தமாக 300 கோடி ஆகியுள்ளது.. இதன் தயாரிப்பாளர்கள் லலித் விஜய்க்கு மட்டும் சம்பளமாக 120 கோடிகள் கொடுத்துள்ளார் . விஜய்க்கு அடுத்தபடியாக இந்த படத்தில் சம்பளம் வாங்கியது லோகேஷ். அவருக்கு அடுத்தபடியாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு தான் வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News