ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் 2 பேர்.. தளபதி இறக்கும் அடுத்த நங்கூரம்

Vijay: விஜய் தன்னுடைய கடைசி படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு மக்கள் பணியில் முழுதாக தீவிரம் காட்ட இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே அவருடைய கட்சி பல விஷயங்களை முன்னெடுத்து செய்து வருகிறது.

அதில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் செய்வதில் தொடங்கி சாமானிய மக்களுக்கு அன்னதானம் போடுவது வரை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். அதில் தற்போது விஜய் ஆரம்பித்திருக்கும் விஷயம் தான் இது நம்ம லிஸ்டிலயே இல்லை என சொல்ல வைத்துள்ளது.

அதாவது ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சாமானிய மக்களுக்கு சட்டத்தில் இருக்கும் பல விஷயங்களை புரிய வைப்பார்கள்.

மேலும் அவர்களுடைய பிரச்சினை தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைப்பது போன்ற பல விஷயங்களில் உதவியாக இருப்பார்கள். இது அனைத்தும் மக்களுக்காக இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வியூகம்

இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ஏனென்றால் பாமர மக்களுக்கு சட்டம் தொடர்பான பல விஷயங்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

அவ்வளவு ஏன் படித்தவர்களே கூட இதில் பல நேரம் தடுமாறித்தான் போகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழக வெற்றிக்கழகம் செய்துள்ள இந்த ஏற்பாடு வரவேற்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்துள்ள விஜய் விரைவில் மாநாடு ஒன்றையும் நடத்த இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே மக்களின் ஆதரவை பெற பல விஷயங்களை அவர் நங்கூரம் போல் இறக்கி வருகிறார்.

அதில் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரண்டு வழக்கறிஞர்கள் என்ற ஐடியா வேற லெவலில் இருக்கிறது. இதுவே கட்சியை மக்கள் முன் கொண்டு சேர்த்து விடும் என ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

விஜய் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள்

- Advertisement -