என்னை தேச விரோதியாக விமர்சித்தது தவறு.. கொந்தளித்து நீதிமன்றத்தில் முறையிட்ட தளபதி

சினிமாவை பொருத்தவரை ரசிகர்கள் நடிகர்களை வெறும் நடிகர்களாக மட்டும் பார்ப்பதில்லை. அவர்களின் முன்மாதிரியாகவே பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தனது படங்கள் மூலம் பல சமூக கருத்துகளை பேசி வரும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தான் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி அதிகமாக இருப்பதால், வரியை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம், “தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வரிதான் முதுகெலும்பாக உள்ளது. வரி தெலுத்துவது என்பது கட்டாயமாகும். தனி நபரின் விருப்பத்தின் அடிப்படையில் வரி செலுத்துவதற்கு இது நன்கொடை இல்லை. திரைப்பட நடிகர்களை மக்கள் நிஜ வாழ்க்கை நாயகர்களாக பார்க்கின்றனர். இவர்கள் போலியான நாயகர்களாக இருக்கக்கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேச துரோக செயல்” என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

vijay-cinemapettai
vijay-cinemapettai

நீதிபதியின் இந்த கருத்து கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நீதிபதியின் இந்த கருத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணை அக்டோபர் 25 அதாவது இன்று நடந்தது.

அதில் நடிகர் விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், “இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதி பதி சொன்ன கருத்து என்னை புண்படுத்தியுள்ளன. கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமரிசித்திருப்பது தேவையற்றது.

நிலுவை வரித்தொகையாக ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்றே செலுத்தி விட்டோம்” என கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்