குடும்பத்துக்குத் தெரியாமல் விஜய் செய்யும் தப்பு.. அவசரப்பட்டு உளறி விட்டீர்களே தளபதி

தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் தளபதி விஜய் வீட்டிற்கு தெரியாமல் நீண்டகாலமாக ஒரு தப்பு செய்து வந்தது சமீபத்தில் அவருடைய பழைய வீடியோ ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

தளபதி விஜய் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரே நடிகராக வலம் வருகிறார்.

விஜய் ஒரு அசைவப் பிரியர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அசைவ சாப்பாடு இல்லை என்றால் அந்த நாள் பித்து பிடித்தது போல் ஆகிவிடுவாராம் விஜய். பெரும்பாலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடுவது குறைவு தானாம்.

முன்னணி நடிகர்கள் பலரும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது மதிய சாப்பாடு பெரும்பாலும் அவர்களது வீட்டில் இருந்தே வந்துவிடும். அப்படித்தான் விஜய்க்கும். ஆனால் விஜய் வீட்டில் ஒரு கட்டுப்பாடு உள்ளதாம்.

செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு தினங்களில் சைவம் தான் சமைக்க வேண்டும் என்பதில் விஜய் வீட்டினர் பிடிவாதமாக இருக்கிறார்களாம். இதனால் அந்த இரண்டு நாட்கள் மட்டும் சூட்டிங் ஸ்பாட்டில் அசைவம் சாப்பிட்டு விடுவாராம் விஜய்.

இதை அவரே பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ கடந்த சில தினங்களாக நிலையத்தைச் சுற்றி சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

beast-cinemapettai-01
beast-cinemapettai-01

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -