ஷூட்டிங்கில் ஆச்சர்யபடுத்திய விஜய்.. தரமான ஒரு சம்பவத்தை சொன்ன தாடி பாலாஜி

விஜய் டிவியின் பிரபலம் தாடி பாலாஜி தன் மனைவியுடன் ஆன விவாகரத்து விஷயம்  இணையத்தில் பேசுபொருளாக இருந்தது. பல சர்ச்சைகளையும் உள்ளாகியது. விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2 வில் பாலாஜி தன் மனைவியுடன் சேர்ந்து பங்கேற்றார்.

அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பிபி ஜோடிகளில் கலக்கப்போவது யாரு நிஷா உடன் பங்கேற்கிறார். இதில் தன் நகைச்சுவையுடன் நடனத்தையும் சேர்த்து அசத்தி வருகின்றனர். இந்த வாரம் கில்லி திரைப்பட பாடலுக்கு பாலாஜி நடனமாடினார்.

அப்போது தளபதியுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை தாடி பாலாஜி பகிர்ந்து கொண்டார். மேலும் ‘கடவுள் கொடுத்த மிகப்பெரிய கிப்ட் விஜய் நட்பு’ எங்களுடைய ட்ராவல் 8 வருடங்கள்.

ஒரு நாள் ‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது’ என்பதற்கேற்ப இருவரும் படப்பிடிப்பில் இருந்தபோது என் முகத்தில் உள்ள சோகத்தை உணர்ந்து கொண்டார். என் தந்தையின் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது.

அதனை அறிந்து படப்பிடிப்பு முடிந்தவுடன் எனக்கு முன்னரே மருத்துவமனைக்கு சென்று ஒரு லட்சம் கொடுத்துவிட்டு வந்தார் தளபதி’ என்று விஜய் உடன் நடந்த நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து தாடி பாலாஜி கொண்டார்.

Thadi-Balaji-Images
Thadi-Balaji-Images
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்