காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க.. அரசியல் விதையை சாமர்த்தியமாக போட்ட விஜய்

Actor Vijay: இன்று முழுவதுமே விஜய் பற்றிய செய்திகள் தான் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்ற அனைத்து தொகுதிகளிலும் இருக்கும் மாணவ செல்வங்களுக்கு அவர் இன்று தன் சொந்த செலவில் நல உதவிகளை செய்து கௌரவப்படுத்தினார்.

அது குறித்த தகவல்கள் அனைத்தும் ட்ரெண்டாகி வரும் நிலையில் மேடையில் விஜய் பேசிய பேச்சுதான் பல யூகங்களை கிளப்பி இருக்கிறது. அதாவது இந்த மேடை அவருடைய அரசியல் வருகைக்கான ஒரு விதையாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் இன்று மாணவர்களிடம் அவர் ஆற்றிய உரை அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது.

Also read: திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

அந்த வகையில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் விஷயத்தை அவர் மாணவர்களுக்கு சொல்வது போன்று இன்றைய அரசியல்வாதிகளுக்கும் கூறினார் என்று தான் சொல்ல வேண்டும். என்னவென்றால் தன் விரலை வைத்து தன் கண்ணையே குத்தும் நிலை தான் இப்போது இருக்கிறது. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை நாம் அனுமதிக்க கூடாது.

உதாரணமாக ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் பேர் இருந்தால் 15 கோடி வரை செலவாகும். ஒரு தேர்தலுக்கு அரசியல்வாதி இவ்வளவு செலவு பண்ணுகிறார் என்றால் இதற்கு முன்பு அவர் எந்த அளவுக்கு சம்பாதித்து இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Also read: அசுரன் பட சிவசாமியாக மாறிய தளபதி விஜய்.. மேடையில் அசர வைத்த வசனம்

மேலும் இது போன்ற விஷயங்கள் மாணவர்களின் பாடத்திட்டத்திலேயே இருக்க வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்கள் பெற்றோர்களிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று கூற வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார். தற்போது விஜய் பேசியிருக்கும் இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து விஜய் தன் அரசியல் வருகைக்கான ஒரு அஸ்திவாரமாக இந்த மேடையை மாற்றி இருக்கிறார் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. இப்படி அரசியல் நிலவரம் பற்றியும், வாக்கு பற்றியும் கூறியிருக்கும் விஜய்யின் இந்த கருத்துக்கு தற்போதைய அரசியல் புள்ளிகள் எந்த மாதிரியான பதிலை கொடுப்பார்கள் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

Also read: மாஸ் என்ட்ரியால் கதி கலங்கும் பெரும்புள்ளிகள்.. நியூ லுக்கில் நீலாங்கரையை வட்டமிட்ட தளபதி விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்