தனிக்காட்டு ராஜாவாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.. வாரிசால் விஜய்க்கு கிடைத்த கெட்ட பெயர்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படம் ஓரளவு நல்ல வசூலை பெற்று வருகிறது. ஆனால் விஜய்யின் சினிமா கேரியரை பொறுத்தவரையில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக வலம் வருபவர் விஜய் தான். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஐந்து படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாலே அது தெரியும்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் விஜய் வசூல் ராஜாவாக வலம் வந்தார். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தரும் விதமாக சிலர் கருத்துக்களை கூறி வந்தார்கள். அதாவது பெரிய நடிகர்களின் படங்கள் விஜய்யின் படத்தோடு போட்டி போடாமல் தனியாக வெளியாகி வருவதால் தான் விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக உள்ளார் என கூறி வந்தனர்.

Also Read : தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா அஜித் மற்றும் விஜய்.? இன்னும் தெளிவு பெறாத சினிமா மோகம்

மேலும் டாப் நடிகர்களுடன் விஜய் போட்டி போட்டால் கண்டிப்பாக சருக்களை சந்திப்பார் என சொன்னார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் எத்தனை ஹீரோக்களுடன் தளபதி போட்டி போட்டாலும் அவர் தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என மாருதட்டி கொண்டனர். ஆனால் இப்போது அது தவிடு பொடி ஆகியுள்ளது.

அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஜனவரி 11-ம் தேதி ஒரே நாளில் போட்டி போட்டி கொண்டது. முதல் நாள் கலெக்ஷனில் துணிவு படம் தான் அதிக வசூல் செய்துள்ளது. வாரிசு படம் துணிவைக் காட்டிலும் சற்று குறைவாகத்தான் வசூல் செய்திருந்தது.

Also Read : விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. அதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

இதுவே விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை என்றால் முதல் நாளே போட்ட பட்ஜெட் மொத்தத்தையும் எடுத்து விடுவார்கள். அதுமட்டுமின்றி விஜய்யின் ஒவ்வொரு படத்தின் முதல் நாள் கலெக்ஷனும் அவரின் முந்தைய படத்தின் கலெக்ஷனை முறியடித்து விடும்.

ஆனால் வாரிசு படத்தால் அந்த சாதனையை முறியடிக்க முடியாமல் போய்விட்டது. மேலும் தனிக்காட்டு ராஜாவாக விஜய்யின் படம் மட்டும் வெளியானால் தான் வசூல்ராஜா என்ற பெயரை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியும், அதுவே மற்ற நடிகர்களுடன் போட்டியிட்டால் இந்த நிலைமைதான் என அஜித் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்

- Advertisement -