
Vijay Movie Re- release: விஜய் கேரியரில் மறக்க முடியாத அளவிற்கு எத்தனையோ படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. அந்த மாதிரி படங்களை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அப்படிப்பட்ட ஒரு படம் 20 வருஷம் கழித்து இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
கமர்சியலாகவும், மாஸ் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமாக வெளிவந்து தான் கில்லி. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் கில்லி படம் வெளியானது.
இதில் விஜய் ஒரு கபடி விளையாட்டு வீரராகவும், திரிஷாவை காப்பாற்றி மாஸ் ஹீரோவாகவும், கடைசியில் காதல் ரொமான்ஸ் என கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
எத்தனை வருஷம் ஆனாலும் தளபதி மட்டுமே ஆட்டநாயகன்
அந்த வகையில் ரீ ரிலீஸ் ட்ரெண்டிங்கை முதன் முதலில் ஆரம்பித்தது கமலா தியேட்டர் தான். அதுவும் வெறும் 40 ரூபாய் டிக்கெட் வைத்து மக்களுக்கு பழைய படங்களை மறுபடியும் திரையில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இது போகப் போக நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதே போல பல திரையரங்குகளிலும் இதே ட்ரெண்டிங்கை ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் இப்பொழுது ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் 40 ரூபாய் டிக்கெட் வைத்து காசி, உதயம் போன்ற பல தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.
அந்த வகையில் இன்று மட்டுமே சென்னையில் கலெக்ஷன் 3.5 லட்சத்தை தொட்டிருக்கிறது. இப்ப மட்டும் இல்ல எப்பொழுதுமே ஆட்டநாயகன் வசூல் நாயகன் விஜய் தான் என்று அவருடைய படங்கள் தொடர்ந்து நிரூபித்து காட்டி வருகிறது.