பொறாமையால் ராஜமௌலியை அவமானப்படுத்திய விஜய் பட நடிகை.. தென்னிந்திய சினிமாவிற்கு இப்படி ஒரு அவமானமா!

ராஜமௌலி என்றாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது பிரம்மாண்ட படங்களான பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ரசிகர்களிடம் அதிக அளவில் பேசப்பட்டு கோடிக்கணக்கில் லாபத்தை வாரி குவித்தது. இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளிலும் இந்த படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு இவருடைய புகழ் கொடி கட்டி பறந்தது.

அப்படிப்பட்ட இவரை ஒரு நடிகை அவமானப்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். அந்த நடிகை வேற யாரும் இல்லை சினிமாவில் எப்படியாவது தலை காட்ட முடியாதா என்று ஏங்கி இருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது மிகப்பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார். அத்துடன் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரளும் நடிகையாக மாறிவிட்டார்.

Also read: பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது.. 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

அதனால் என்னமோ தான் ஓவராக திமிரில் அலைந்து கொண்டிருக்கிறார். அதாவது இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசும் பொழுது இவரே சம்பந்தமே இல்லாமல் ஆர்ஆர்ஆர் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதற்கு எனக்கு சுத்தமா நேரமும் கிடையாது என்று கூறி இருக்கிறார். இது வேணும் என்றே ராஜமௌலியை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி இருக்கிறார்.

அது எப்படி படம் வெளிவந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் படம் பார்க்கவில்லை நேரமில்லை என்று இவர் சொன்னது இவருடைய திமிரை தான் காட்டுகிறது. அப்படியே இவர் பார்க்கவில்லை என்றாலும் அதை இப்படி ஒரு பேட்டியில் கூறி அந்த படத்திற்கு அவமானம் சேர்க்கும் படியாக கூறாமல் இருந்திருக்கலாம்.

Also read: பாகுபலி உடன் ஒத்துப்போகும் தங்கலான்.. பா ரஞ்சித்துக்கும், ராஜமவுலிக்கும் இதுதான் வித்தியாசம்

இதே இது ஒரு ஹிந்தி படம் ஆஸ்கார் விருது வாங்கி இருந்தால் இவரால் இப்படி பதில் சொல்ல முடியுமா, தென்னிந்திய படங்கள் என்றால் அப்படி இவருக்கு என்ன ஒரு அலட்சியம். அப்படியே இவர் பார்க்கவில்லை என்றாலும் இதை சொல்லி இருக்கத் தேவையில்லை. இவருக்கு தென்னிந்தியா சினிமா மேல் இருக்கும் பொறாமையில் தான் இப்படி வெளிப்பாடாக காட்டுகிறார்.

இவர் இப்படி சொன்னதிலிருந்து பல பிரபலங்களும் இவரை மிக விமர்சித்து வருகிறார்கள். கொஞ்சமாவது கடந்த காலத்தை யோசித்துப் பார்க்க வேண்டும் இவர் சினிமாவிற்கு எப்படி வந்தார் என்று. அதிலும் விஜய் படத்தில் நடிக்கவே தெரியாமல் ஏதோ சோள காட்டு பொம்மையாக இருந்து வந்தார். இப்பொழுது பணம் இருக்கும் திமிரில் ஓவராக தான் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று பிரபலங்கள் கூறி வருகின்றன.

Also read: 2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை