எனக்கு மிகவும் பிடித்த அஜித் படம்.. புகழ்ந்த தளபதியின் தந்தை SAC

சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ அவர்களின் ரசிகர்களுக்கிடையே எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இரண்டு இமயங்களாக இருக்கும் நடிகர்கள் என்றால் அது விஜய் அஜித் தான். இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் படத்தை விஜய்யின் தந்தையும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அஜித் நடிப்பில் வெளியாகி அவரது கெரியரில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் சிட்டிசன்.

இப்படத்தை இயக்குனர் சரவண சுப்பையா என்பவர் இயக்கி இருந்தார். இதுதவிர ஒரு சில படங்களை இயக்கி இருந்தாலும் இவருக்கு சிட்டிசன் படம் தான் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து சரவண சுப்பையா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். மீண்டும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் புதுமுக நாயகன் கதிரவன் மற்றும் நாயகி அனைகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் சிட்டிசன் படமும் ஒன்று. சிட்டிசன் படத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த படம்” என கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தை அஜித்தின் படத்தை புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் கூட அவர் அஜித் படத்தை புகழ்ந்து பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.