தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் தளபதி விஜய்.. பீஸ்ட் பட மாஸ் கெட்டப்பில் வைரல் புகைப்படம்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட் இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தை பற்றி படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட் வெளியிடாமல் இருந்தனர்.

ஆனால் தொடர்ந்து பீஸ்ட் படத்தினை பற்றி அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட விஜய் மாலில் எடுக்கப்பட்ட காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சட்டையில் ரத்தக்கறையுடன் இருப்பதால் கண்டிப்பாக ஏதோ ஒரு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது எனக் கூறி வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்தில் அரபு மொழி கலந்த ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது அது கூடிய விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகின. மேலும் படத்தின் சண்டை இயக்குனரான அன்பு அறிவு இருவரும் விஜயின் சண்டைக்காட்சிகள் கண்டிப்பாக காட்சிகளை ரசிகர்களுக்கு பிடிக்கும் என கூறியிருந்தனர்.

vijay fans
vijay fans

சமீபத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்கள்  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்து ரசிகர்களை பார்த்துள்ளார். இப்புகைப்படத்தில் விஜய் தனது ரசிகர்களுடன் அமர்ந்துள்ளார்.

vijay-66
vijay-66

மற்றவர்கள் போல் நடிகர் விஜய் நடுவில் அமராமல் தன் ரசிகர்களுடன் ஓரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் இன்னும் எளிமையாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் அவரது குணமும் மாறவில்லை என தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேரில் விஜய் சந்தித்துள்ளதால் அடுத்தடுத்த கட்ட திட்டங்களை விஜய் அவர்களுக்கு தெரிவித்திருப்பார் எனவும் கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -