சொகுசு காருக்கு வரி கட்டாத விஜய்.. ரீல் ஹீரோ என பங்கமாக கலாய்த்த நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் தன்னுடைய சொகுசு காருக்கு வரி கட்டவில்லை என்கிற செய்தி வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் விஜய் தான் என மூச்சுக்கு முன்னூறு தடவை பல சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தாங்கள் கொடுக்கும் பேட்டிகளில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளதாம்.

தளபதி விஜய் ஒரு கார் பிரியர் என்பது அனைவருக்குமே தெரியும். கார் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டும் தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ஒரு சொகுசு காரை இறக்குமதி செய்தார்.

vijay-cinemapettai-01
vijay-cinemapettai-01

ஆனால் அந்த காருக்கு நுழைவு வரி கட்டவில்லை என கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்துள்ளது. ஒன்பது வருடங்களாக நுழைவு வரி கட்டாமல் எப்படி அந்த காரை ரிஜிஸ்டர் செய்து ஓட்ட முடியும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், வரி என்பது காலாகாலத்தில் செலுத்த வேண்டிய ஒன்றுதான், இது ஒன்றும் நன்கொடை இல்லை எனவும் அழுத்திச் சொல்லியுள்ளது. மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை நேராக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு வைத்திருக்கும் நடிகர்கள் ரீல் ஹீரோவாக மட்டும் இருக்கக்கூடாது எனவும் விஜய்க்கு குட்டு வைத்துள்ளது.

ஆனால் இதுகுறித்து கோலிவுட்டில் விசாரிக்கையில், விஜய் இதுவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை எதுவும் தராததால் வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த செய்தி நியூஸ் 7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானது.

- Advertisement -