வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கதை கேட்க கூட விருப்பமில்ல, அவரோடு செட்டே ஆகாது.. இயக்குனருக்கு டகால்டி கொடுக்கும் விஜய்

விஜய் படம் என்றாலே அதிக அளவில் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து என்ஜாய் பண்ற அளவிற்கு நடிப்பு இருக்கும். இதுவே இவருடைய படங்கள் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக அமையும். அத்துடன் இவருக்கு ஏற்ற மாதிரி கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவரை அடிச்சிக்கிறதுக்கு ஆளே கிடையாது. எந்த மாதிரி கதையை எப்படி நடித்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று ஒவ்வொரு விஷயம் பார்த்து பார்த்து நடிக்கக் கூடியவர்.

மேலும் இவர் எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் அந்த படத்திற்கான முழு கதைகளையும் ஆரம்பத்திலேயே கேட்ட பிறகு தான் நடிப்பதற்கு சம்மதத்தை தெரிவிப்பார். அதன்பின் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை இவர் படங்களில் ஆங்காங்கே கொஞ்சம் சேர்த்துக் கொள்வார். அதனாலையே எல்லா இயக்குனர்களும் இவரிடம் கதை சொல்லும் போது முழு கதையும் சொல்லித்தான் சம்மதம் வாங்குவார்கள்.

Also read: விஜய் ஒதுக்கி வைத்ததால் இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி.. உறுதி செய்த கிழக்கு வாசல் புகைப்படங்கள்

அப்படி இருக்கும் பொழுது இதற்கெல்லாம் விதிவிலக்காக ஒரு இயக்குனர் யாரிடமும் முழு கதையை சொல்லாமல் வெறும் ஒன் லைன் ஸ்டோரியை மட்டும் வைத்துக் கொண்டு போக போக கதையை மாற்றிக் கொள்வார். அப்படிப்பட்ட இந்த இயக்குனர் விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

ஆனால் இந்த ரூட் எனக்கு செட்டே ஆகாது என்று கதையை கூட கேட்க விருப்பமில்லாமல் இந்த இயக்குனரை தவிர்த்து வருகிறார். ஆனாலும் விஜய்யை வைத்து எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் இருக்கும் இந்த இயக்குனருக்கு விஜய் டகால்டி கொடுத்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

Also read: என்னை விட அஜித்தை ரொம்ப பிடிக்குமா ? மீனாவிடம் விஜய் கேட்ட கேள்விக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?

ஆனால் இந்த இயக்குனரின் படங்கள் எப்பொழுதுமே பெரிய அளவில் வெற்றியை கொடுத்து அதிக பாராட்டுகளை தான் வாங்கிக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட இவரின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இதுவரை இருக்கிறார். அதுவும் இவர் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இயக்குனர் யார் என்றால் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் எப்பொழுதுமே முழு கதையை ரெடி பண்ணி படத்தை எடுக்கக் கூடியவர் இல்லை. போகப் போக படத்துக்கு ஏற்ற மாதிரி இவரோட கதையை மெருகேற்றிக் கொள்வார். அத்துடன் திடீர் திடீரென்று கதையும் மாற்றக் கூடியவர். அதனாலேயே இவர் விஜய்க்கு எந்த விதத்திலும் செட்டே ஆகாது.

Also read: விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அடித்த லக்.. 2026 எலக்சனை குறி வைத்து தளபதி போடும் மாஸ்டர் பிளான்

- Advertisement -

Trending News