1.5 லட்சம் மதிப்பிலான வித்தியாசமான நாயை மடியில் வைத்து கொஞ்சும் விஜய் தேவர்கொண்டா.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் நடிகைகள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவாக தெரியாத வித்தியாசமான விலங்குகளை தங்களது வீட்டில் வளர்த்து வருவார்கள்.

நடிகைகளில் பெரும்பாலும் திரிஷா நாய் வளர்ப்பில் மிகவும் அக்கறை காட்டி வருகிறார். தெரு நாய்களுக்கு கூட உதவிகள் செய்து வருகிறார். தெலுங்கு நடிகர்கள் வெளிநாடுகளிலிருந்து அரிய வகை நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட பிரபாஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு நாயுடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அந்தவகையில் தெலுங்கில் மற்றுமொரு பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளிநாட்டு நாயுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

vijaydevarkonda-siberianhusky-cinemapettai
vijaydevarkonda-siberianhusky-cinemapettai

அந்த நாயானது பனிப்பிரதேசங்களில் அதிகமாக வாழும் சைபீரியன் ஹஸ்கி(Siberian Husky) என்ற உயிர் இனத்தைச் சார்ந்ததாகும்.

இதன் குட்டி இந்திய மதிப்பில் சுமார் 60,000 முதல் 80,000 வரை விற்கப்படுகிறதாம். இதிலேயே கொஞ்சம் வித்தியாசம் கொண்ட நாய் வகைகள் சுமார் 1.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்