மண்ணை கவ்விய விஜய் தேவரகொண்டாவின் லைகர்.. 90% காட்சிகள் ரத்து, இவ்வளோ கோடி நஷ்டமா?

விஜய் தேவர் கொண்டாவின் நடிப்பில் உருவான லைகர் படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் பூரி ஜெகன்னாத் எழுத்து, இயக்கத்தில் இப்படம் உருவாகியிருந்தது. குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

லைகர் படம் பான் இந்திய திரைப்படமாக ஐந்து மொழிகளில் ரிலீசான நிலையில் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை படத்திற்கு வந்து சேர்ந்தது. தற்போது பாலிவுட்டில் அதிகமாக நெப்போடிஸம் பற்றி பேசி வருகிறார்கள்.

Also Read : விஜய் தேவரகொண்டாவை ஓரங்கட்டிய அண்ணாச்சி.. லிகர் படத்திற்கு கிடைத்த IMDB ரேட்டிங்

இதனால் அங்கு அமீர்கான், அக்ஷய்குமார் உள்ளிட்டோரியின் படங்களை பாய்க்காட் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக விஜய் தேவர்கொண்டா பேசி வந்தார். இதனால் ரசிகர்கள் விஜய் தேவர் கொண்டாவை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

அதேபோல் இவரின் லைகர் படம் வெளியாகி பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்படம் கிட்டத்தட்ட 106 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. லைகர் படம் முதல் வாரத்தில் 46 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இப்படத்தினால் தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

Also Read : விஜய் தேவரகொண்டா ரசிகர்களை எச்சரித்த நடிகை.. ஒரு அளவுக்கு தான் பொறுமை

இந்நிலையில் லைகர் படம் ஓடாததால் பல திரையரங்குகளில் இப்படத்தை தூக்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவில் பல இடங்களில் 90% காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இவ்வாறு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்த விஜய் தேவர் கொண்டாவின் சினிமா வாழ்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விஜய் தேவர்கொண்டாவின் மார்க்கெட் கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : 160 கோடி பட்ஜெட் லைகர் தோல்விக்கு இவர்தான் முக்கிய காரணம்.. கழுவி ஊற்றிய தியேட்டர் ஓனர்