ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மட்டமான போஸ்டரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் தமிழிலும் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது தற்போது லிகர், குஷி, ஜன கன மன உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

அதில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் லிகர் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகன்நாத் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த படத்தை கரண் ஜோஹர் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் அமெரிக்கா குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா ஒரு புது போஸ்டரை தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரின் மட்டமான போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டர் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் இப்படி தைரியமாக ஒரு போட்டோவை வெளியிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்காக கடின உழைப்பை கொடுத்து நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டியிருக்கிறது. அந்த வகையில் இப்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News