அம்பலமானது விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா ரகசிய உறவு.. போட்டோவால் ஷாக்கான குடும்பம்

ராஷ்மிகா மந்தனா தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல அவர் நடித்து வரும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் இப்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்க ரிலீஸ் ஆக உள்ளதால் அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் தேவர் கொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியானது. அதாவது கீதா கோவிந்தம் படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி பக்கவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

Also Read : ஓவர் கெத்து காட்டிய ராஷ்மிகா.. கண்டுக்காமல் நோஸ்கட் செய்த காந்தாரா இயக்குனர்

இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த இருவரும் வெளியில் ஒன்றாக செல்வதை பார்க்க முடிந்தது. இதனால் இணையத்தில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் வெளியானது. ஆனால் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் இதற்கு எதுவுமே சொல்லாமல் மௌனம் காத்து வந்தனர்.

ஆனால் இப்போது இவர்கள் இருவருமே தானாகவே சிக்கி உள்ளனர். அதாவது புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு பல நட்சத்திரங்கள் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் விஜய் தேவர் கொண்டாவும் மாலத்தீவில் கையில் சரக்கு பாட்டிலுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read : கன்னட படத்தில் நடிக்க தடையா?. பரபரப்பான பேட்டியளித்த ராஷ்மிகா

அதேபோல் விஜய் தேவர் கொண்டா பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே ராஷ்மிகா மந்தனாவும் அதே ஸ்விம்மிங் பூல்லில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வசமாக மாட்டிக் கொண்டார். ஆகையால் விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே மாலத்தீவில் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இதை அறிந்த அவர்களது குடும்பமே ஷாக் ஆகி உள்ளது.

இதனால் இவர்கள் காதலிப்பது உறுதியா என குழப்பத்திலிருந்து ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் மூலம் உறுதியாகி உள்ளது. இனி இவர்களே முன்வந்து தாங்கள் காதலிக்கவில்லை என்று சொன்னாலும் ரசிகர்கள் நம்ப தயாராக இல்லை. ஆகையால் விரைவில் விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகா தங்களது காதலை உறுதிப்படுத்த வாய்ப்புள்ளது.

vijay-devarakonda-cinemapettai
Rashmika-cinemapettai

Also Read : அவங்க ஒன்னும் கடவுள் இல்ல.. கேமராவை வச்சு பார்த்தார்களா, மீண்டும் எதிர்ப்பை சம்பாதித்த ராஷ்மிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்