விஜய் தேவரகொண்டா பட நடிகையின் காதை கடிக்கும் மைக் டைசன்.. அடேங்கப்பா! மெர்சலாக்கிய புகைப்படம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா இவரது நடிப்பில் வெளியாக படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லைகர் என்ற ஆக்சன் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் போட்டி போடுவதற்கு பிரபல குத்துச்சண்டை வீரரை படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக உலகப் புகழ்பெற்ற மைக் டைசன் இப்படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிக்க வைத்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது மைக் டைசன் படக்குழுவினர் அனைவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். விஜய் தேவர் கொண்டா, அனன்யா பாண்டே மற்றும் சார்மி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ananya pandey mic daison
ananya pandey mic daison

மேலும் படத்தின் கதாநாயகியான அனன்யா பாண்டேவை மைக் டைசன் கடிப்பது போல் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படக்குழுவினர் மைக் டைசன் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தாலும் ஒரு நல்ல மனிதர் என கூறியுள்ளனர்.

தற்போதைய படப்பிடிப்பை அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். கூடிய விரைவில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் மைக் டைசன் நடித்துள்ளதால் லைகர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்