3வது முறை மோதியும் அஜித்துடன் தோற்றுப்போன விஜய்.. வம்சியால் தளபதிக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சகட்ட போட்டி களத்தில் இருப்பவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் ஆகிவிடும். மேலும் அவ்வப்போது ரிலீசான முந்தைய படங்களின் ஒப்பீடுகளை பற்றியும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள்.

இதில் கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் கோலிவுட் பாக்ஸ் ஆபிசின் அசைக்க முடியாத வெற்றி நாயகனாக இருக்கிறார். அஜித்தை பொறுத்தவரைக்கும் அவருடைய படங்கள் அவ்வப்போது சறுக்கலை சந்தித்து விடும். இதற்கிடையில் கடந்த பொங்கல் ரிலீஸ் ஆக தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஒரே நாளில் மோதியது. இதில் எந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Also Read:ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா வராதா?.. அஜித் எடுத்த விபரீத முடிவு

இதற்கிடையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வாரிசு திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. எப்போதுமே விஜய் படங்களை போட்டால் அந்த சேனலின் டிஆர்பி எகிறிவிடும். 2004ல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் இன்றுவரை சேனலின் டிஆர்பியை தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்தில் ரிலீஸ் ஆன வாரிசு மொத்தமாக சறுக்கிவிட்டது. அதுவும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை விட கம்மியாக டிஆர்பியை பெற்றிருக்கிறது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் ரொம்ப வருடத்திற்கு பிறகு அவர் நடித்த குடும்ப பின்னணி கொண்டு திரைப்படம் ஆகும். இந்த படம் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது பெற்ற டிஆர்பி ரேட்டிங் இதுவரை வேறு எந்த படமும் பெறவில்லை. மேலும் சமீபத்தில் மூன்றாவது முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.

Also Read:எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான அஜித் படம்.. இன்று வரை அடையாளமாய் மாறிப்போன கதை

விஜய்யின் வாரிசு பெற்ற ரேட்டிங்கை விட இந்த படத்திற்கு அதிகமாக கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வித்தியாசத்தில் வெளியாகி இருக்கும் இந்த இரண்டு படங்களில் விஸ்வாசம் திரைப்படத்திற்கே இன்னும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அதுவும் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக பார்க்கப்படும் தளபதி விஜய்யால் தொலைக்காட்சியில் அஜித்தின் படத்தை முந்த முடியவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் விஜய் நடித்த பிகில் மற்றும் சர்கார் திரைப்படங்கள் கூட டிஆர்பி ரேட்டிங்கில் விஸ்வாசம் திரைப்படத்திற்கு அடுத்த தான் இருக்கின்றன. அஜித் படத்தைப் போலவே சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்தே திரைப்படமும் இன்றுவரை டிஆர்பி யில் கலக்கி வருகிறது. என்னதான் வாரிசு மிகப்பெரிய வெற்றி என ரசிகர்கள் வெளியே சொல்லிக் கொண்டாலும், பொதுமக்களால் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை என்பது தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஆர்பி ரேட்டிங்கில் தெரிகிறது.

Also Read:காசு பைத்தியம் பிடிச்சு அலையறாங்க.. நயன்தாரா லிஸ்டில் சேர்ந்த ரேசர் அஜித்

 

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -