பிகில் 300 கோடி வசூல், வடிகட்டின பொய்.. மொத்த கலெக்ஷன் இவ்வளவு தான், சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது விஜய் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது தற்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் மூலம் வசூலை வாரி குவித்து வருபவர் நடிகர் விஜய் இவரது படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் பெற்று வருகின்றன இதனை பல இடங்களிலும் பல பேட்டிகளிலும் பல பிரபலங்கள் கூறியுள்ளனர். தற்போது திருச்சியை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ஸ்ரீதர் பிகில் படத்தின் உண்மையான வசூல் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிகில் 300 கோடி என்பது வடிகட்டின பொய் எனவும் பிகில்  திரைப்படம் தமிழ்நாட்டில் மற்றும் 130 கோடி வசூல் பெற்றதாக கூறினார்.மேலும் மற்ற நடிகர்களின் ஒரு சில படங்கள் வசூல் பெற்றதாக கூறுவது அனைத்தும் பொய் எனவும் கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலர் மட்டுமே உண்மையான வசூலை கூறுவதாகவும் கூறியுள்ளார்.

trichy-sridhar
trichy-sridhar

மேலும் பல ஊடகங்கள் படத்தின் வசூலை பற்றி அவதூராக கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர் இடமும் டிஸ்ட்ரிப்யூட்டர் இடமும் படத்தின் வசூலை கேட்டறிந்து தகவலை வருகின்றனர் ஆனால் மற்ற ஊடகங்கள் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் வாசலாக நினைத்து கூறி விடுகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்களின் மனநிலையும் புரிந்துகொள்ள முடிவதில்லை எனவும் கூறியுள்ளார். அதாவது அசுரன் படத்தின் முதல்நாள் பல ரசிகர்கள் வந்து பார்த்தனர். ஆனால் அதே தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெறும் 40 பேர் மட்டுமே இருந்ததாகவும் கூறியுள்ளார். அதாவது ரசிகர்களின் மனநிலையை பொறுத்துதான் ஒரு படம் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் உள்ளது மேலும் இதனை யாரும் கணிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

- Advertisement -