விஜய்க்காக வித்தியாசமான முயற்சியில் அனிருத்.. அப்புறம் என்ன அரபுநாடு வரைக்கும் ஒலிக்கும்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் நெல்சன் திலீப்குமார் புதுவிதமான கதையை கையில் எடுத்துள்ளார். இப்படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படம் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.

சமீபகாலமாக பலரும் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். தற்போது பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அனிருத் தற்போது பீஸ்ட் படத்திற்கான பாடல் காட்சிகளுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் படத்திற்கு தீம் மியூசிக்கும் இசையமைத்து வருகிறார்.

ஆனால் இதைவிட படத்தில் தமிழ்மொழி மற்றும் அரபு மொழி கலந்து ஒரு பாடல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தளபதியின் பாடல் அரபு மொழியிலும் ஒலிக்க போகுது என பலரும் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே விஜய்க்கு அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது படம் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதால் தற்போது அரபு மொழியில் ஒரு பாடலும் அதன் பிறகு மற்ற மொழிகளில் பாடல்களை எழுதவும் திட்டமிட்டுள்ளனர். தற்போது பாடல் காட்சிகளை படக்குழுவினர் எடுத்து முடித்துள்ளனர்.

vijay-anirudh
vijay-anirudh

அடுத்ததாக படக்குழுவினர் மாஸ் காட்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு மாஸ் காட்சிகளும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும். திரையரங்கில் அந்த காட்சிகளுக்கு கைத்தட்டல்கள் வாங்கி குவிக்கும் என கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்