பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்.. விபத்தில் இருந்து தப்பித்த விஜய் ஆண்டனிக்கு வந்திருக்கும் புது பிரச்சனை

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி திரை வாழ்க்கையில் மிகவும் திருப்புமுறையாக அமைந்த படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டபோது விஜய் ஆண்டனி எவ்வித பாதுகாப்பு இல்லாமல் கடலில் மோட்டார் பைக்கில் இறங்கியதால் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனால் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Also Read : அஜித் மாதிரி நானும் செய்வேன் என்பதால் வந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் நிலையில் விஜய் ஆண்டனி

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் ஆண்டனிக்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. அதாவது ஒரு ஹீரோவை பொறுத்தவரையில் முகம் தான் ரொம்ப முக்கியம். இப்படி இருக்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் விஜய் ஆண்டனி தேறி வருகிற சமயத்தில் முகத்தில் மிகப்பெரிய அடி விழுந்து உள்ளதாம்.

இப்போது முகத்தை பழையபடி சரி செய்ய வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண வேண்டுமாம். இதற்காக விஜய் ஆண்டனி விரைவில் ஜெர்மனி செல்ல இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : 2022ல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. 6 படம் கையில் இருந்தும் பரிதவிக்கும் விஜய் ஆண்டனி

மேலும் சிகிச்சை முடிந்த பிறகு அனைத்தையும் சரி செய்து விட்டு மீண்டும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்து கொள்ள உள்ளார். இப்போது விஜய் ஆண்டனி ரசிகர்கள் மிக விரைவில் விஜய் ஆண்டனி நலம் பெற்று வரவேண்டும் என்று பிராத்தனை செய்தார்கள்.

ஆனாலும் ஹீரோக்கள் டூப் போடாமல் இதுபோன்று தாமாகவே முன்வந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் அவற்றை செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். ஏனென்றால் இதனால் கடைசியில் பாதிக்கப்பட போவது ஹீரோக்கள் தான்.

Also Read : கடுமையான மன உளைச்சலில் இருக்கும் விஜய் ஆண்டனி.. 2021ல் இருந்து பிடித்து ஆட்டும் கெட்ட நேரம்

- Advertisement -