யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை.. இயக்குனராக களம் இறங்கிய விஜய் ஆண்டனி

நிறைய நடிகர்கள் நன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இயக்கத்திலும் இறங்கி விடுவார்கள். அப்படி ஒரு வேலையைத்தான் விஜய் ஆண்டனி செய்ய உள்ளார். இவருக்கு எதுக்கு இந்த வேலை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். ஒரு சில படங்கள் கையை கடித்தாலும் பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் விஜய் ஆண்டனியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது சசி இயக்கத்தில் உருவான பிச்சைக்காரன். இந்த படம் தமிழில் வெற்றி பெற்றதோடு இல்லாமல் தெலுங்கில் மட்டுமே 50 கோடி வசூல் சாதனை செய்த படம்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதலில் இந்த படத்திற்கான இயக்குனராக ஒரு பெண் இயக்குனரை தேர்வு செய்தார் விஜய் ஆண்டனி. ஆனால் அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, திடீரென பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்குகிறேன் என்ற அறிவிப்பை முருகதாஸ் மூலம் வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2 படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் அனைத்துமே விஜய் ஆண்டனி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா என விஜய் ஆண்டனியே களத்தில் இறங்கி விட்டார்.

விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டு முன் பகுதியில் வெளியாகும் என தெரிகிறது. முதன்முதலாக இயக்குநராக களம் இறங்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

vijay-antony-cinemapettai-01
vijay-antony-cinemapettai-01
- Advertisement -