மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனி.. மூளையை மாற்றி கம்பேக் கொடுத்த பிச்சைக்காரன் 2

கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இன்னும் சொல்லப்போனால் விஜய் ஆண்டனிக்கு அந்த திரைப்படம் தான் முக்கிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கிறது.

ஆனால் இதில் தான் மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருக்கிறது. ஏனென்றால் படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் சசி தான் இயக்கியிருந்தார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி நடித்து இயக்கி இருக்கிறார். இதுவே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து படமும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டது.

Also read: விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலைமை.. மலேசியாவில் இருந்து வெளியிட்ட வைரல் ட்விட்டர் பதிவு

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு ஒரு சிறு விபத்தும் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர் இப்போது பூரண நலம் பெற்று ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு விஷயத்தை பிச்சைக்காரன் 2 பட குழுவினர் செய்திருக்கின்றனர்.

அதாவது இந்தப் படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் ஸ்னீக் பீக் ட்ரைலராக வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில் ரசிகர்கள் அதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அந்த நான்கு நிமிட காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Also read: விஜய் ஆண்டனி எப்படி இருக்கார் எங்க இருக்கார்.? இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

இதன் ஆரம்பத்திலேயே வில்லனின் அறிமுகம் தான் காட்டப்படுகிறது அதில் கொடூரமான பாம்புக்கு வில்லன் எலியை உணவாக போடுவதுடன் இந்த காட்சி விரிகிறது. அதைத்தொடர்ந்து ஒருவரின் மூளையை மற்றொருவருக்கு மாற்றும் அறுவை சிகிச்சையை பற்றிய ஒரு விவாதம் காட்டப்படுகிறது. அதில் நல்லவர்களின் மூளை நன்மையை கொடுக்கும்.

ஆனால் ஹிட்லர் மாதிரியான மூளையை வேறொருவருக்கு பொருத்தினால் என்ன ஆகும் என்ற கேள்வியோடு இந்த ட்ரெய்லர் முடிவடைகிறது. இப்படி சஸ்பென்ஸ் உடன் வெளியாகி இருக்கும் இந்த பிச்சைக்காரன் 2 இந்த வருட சம்மருக்கு வெளியாக இருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை