சர்ச்சை இயக்குனருடன் கூட்டு சேர்ந்த விஜய் ஆண்டனி.. எத்தனை பேரு சாபத்தை வாங்கிக் கட்டிக்க போறாரோ?

இசையமைப்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொண்டிருந்தனர். ஆனால் எல்லோருமே சிறப்பான கதைகளில் நடித்து விட்டார்களா என்றால் சந்தேகம்தான்.

ஆனால் விஜய் ஆண்டனி மட்டும் சந்தேகமே வேண்டாம், நான் நடிக்கும் படங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும் என ஆரம்பத்தில் சில படங்களில் நிரூபித்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிடும்.

நன்றாக சென்று கொண்டிருந்த தன்னுடைய கேரியரை தானே கெடுத்துக் கொள்ளும் விதமாக மாஸ் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு கொஞ்சம் மண்ணை கவ்வினார் விஜய் ஆண்டனி. இருந்தாலும் தன்னுடைய பலம் என்ன என்பதை புரிந்து கொண்டு கொலைகாரன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

வழக்கம் போல இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்து அடுத்தடுத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக மிர்ச்சி சிவாவை வைத்து தமிழ் படம், தமிழ் படம் 2.0 படங்களை கொடுத்த சிஎஸ் அமுதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் கிண்டலடித்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த முறை எந்த ஒரு படத்தையும் கிண்டலடிக்காமல் ஒரு திரில்லர் கதையை இயக்க உள்ளாராம் சிஎஸ் அமுதன். இருந்தாலும் படம் வந்தால்தான் தெரியும், எத்தனை முன்னணி நடிகர்களின் ரசிகர்களை பகையாளி ஆக்கிக் கொள்ள போகிறார்கள் என்று.

vijay-antony-cs-amudhan-movie
vijay-antony-cs-amudhan-movie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்