பிச்சைக்காரனில் சம்பாதித்ததை மொத்தமாய் இழந்த விஜய் ஆண்டனி.. போஸ்டர் காசு கூட தேறல, இதுல கைவசம் இத்தனை படமா?

Vijay Antony: விஜய் ஆண்டனி சம்பாதித்த பேரும் புகழும் என்னவென்றால் இதுவரை அவரை வெறுக்கும் அளவிற்கு ரசிகர்கள் யாரும் இல்லாமல் இருப்பது தான். அதற்கு காரணம் சாதாரணமான ஒரு மனிதராகவும், நடிப்பை எதார்த்தமாகவும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கான படத்தை கொடுப்பதும் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அப்படிப்பட்ட இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ரோமியோ படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் பெரிய லாபம் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றது. எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதில் நடித்து வெற்றி பெற்று விடுவார்.

அதே மாதிரி ரோமியோ படமும் இதுவரை நடிக்காத ஒரு விஜய் ஆண்டனியை பார்க்கலாம். அன்புக்காக ஏங்கி மனைவி இஷ்டப்படி ஆசையை நிறைவேறுத்தும் ஒரு பொறுப்பான அன்பான கணவராக விஜய் ஆண்டனி அவருடைய தீராத காதலை கொடுத்து வருவார். ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.

நஷ்டத்தை கொடுத்த ரோமியோ

இதனால் பெரிய தலைவலியாய் விஜய் ஆண்டனிக்கு மாறி இருக்கிறது. ஏனென்றால் இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் மீரா விஜய் ஆண்டனி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் இப்பொழுது வரை ஒரு கோடி கூட லாபத்தை எட்டவில்லை.

ஆனால் பிச்சைக்காரன் படம் மூலம் கிட்டத்தட்ட விஜய் ஆண்டனிக்கு மட்டுமே 15 கோடி வரை லாபம் கிடைத்ததாம். அதே மாதிரி லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாக ரோமியோ படத்தின் வசூல் அமைந்துவிட்டது. இப்படியே போனால் போஸ்டர் காசு கூட தேறாது போல.

இந்த நிலைமையிலும் இப்பொழுது கைவசம் கிட்டத்தட்ட நான்கு படம் இருக்கிறது. அதாவது அக்னி சிறகுகள், ஹிட்லர், ஹாக்கி மற்றும் வள்ளி மயில். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரோமியோ படம் மிகப்பெரிய தோல்வி ஆகிவிட்டது.

இதில் வரக்கூடிய படங்களும் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. இப்படியே போனால் மொத்தத்தையும் இழந்து தவிக்கும் அளவிற்கு விஜய் ஆண்டணியின் நிலைமை மாறிவிடும். இதனால் இனி வைக்கப் போகிற ஒவ்வொரு அடியும் கவனமாக வைக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்