Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேசக்கூட முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி.. ஒரே விபத்தால் திசை மாறிய வாழ்க்கை

விபத்திற்கு பின் பேசக்கூட முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி.

vijay antony

டி. ராஜேந்திரன் போல் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பிச்சைக்காரன் படத்தை பார்த்த பிறகு விஜய் ஆண்டனிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் இவருடைய பிச்சைக்காரன் 2 படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் வெகு நாட்களாகவே காத்திருக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு ஏற்பட்ட கோர விபத்தால் தற்போது அவருடைய வாழ்க்கையை திசை மாறிப் போய்விட்டது. ஏனென்றால் அந்த விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டு பேசக்கூட முடியாத அளவுக்கு இருக்கிறார்.

Also Read: படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான ஆக்சிடென்ட்.. உயிரைக் காப்பாற்றியது யாருன்னு தெரிவித்த விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்கா தீவுவில் நடத்திக் கொண்டிருக்கும் போது, திடீரென்று நடுகடலில் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது விஜய் ஆண்டனியின் முகம் கேமரா மேன் இருந்த படகின் மீது மோதி உடைந்து தாடை தனியாக கழண்டு விட்டது. அதனால் சுயநிலையை இழந்த விஜய் ஆண்டனி நீரில் மூழ்கி பிறகு, மிதந்த அவரை கதாநாயகி மற்றும் கேமரா மேன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவருடைய முகத்தில் மட்டும் 9 பிளேட் பொறுத்து இருக்கின்றனர். மேலும் விபத்தில் தாடை கழண்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது பேசுவது கூட கடினமாக தெரிகிறது. சில வார்த்தைகள் விஜய் ஆண்டனி பேசும்போது தெளிவான உச்சரிப்பு இல்லை. அந்த அளவிற்கு அவருடைய நிலைமை மோசமானது.

Also Read: மெர்சலை மிஞ்சிய காப்பியா இருக்குதே.. விஜய் ஆண்டனி படத்திற்கு வந்த பெரிய சோதனை

விஜய் ஆண்டனியின் முகமே தற்போது முற்றிலும் மாறி இருக்கிறது. கன்னமும் ஒரு பக்கம் உள்ளே தள்ளியது போல் உள்ளது. இன்னும் முகத்தில் ஒரு சில சிகிச்சை இருக்கிறதாம். அதை மேற்கொண்டால் இன்னமும் வித்தியாசமாக தெரிவார் என்று அவரே தற்போது பட பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்ல விஜய் ஆண்டனி உடலளவில் விபத்தை சந்தித்தாலும் மன அளவில் ரொம்பவே புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் முன்பை விட பாசிட்டிவ் ஆன எண்ணங்கள் மனதில் தோன்றுகிறது என்றும் நம்பிக்கையுடன் பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் விஜய் ஆண்டனியின் இந்த நேர்மையான பேச்சு பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கிறது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை வரும் 19ஆம் தேதி ரிலீஸ் செய்வதால் படத்திற்கான புரமோஷன் வேலைகள் தற்போது படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: ருத்ர தாண்டவத்திற்கு தயாரான விஜய் ஆண்டனி.. பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

Continue Reading
To Top