விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு போடப்பட்ட வழக்கு.. படம் வெளிவருவதற்கு முன்பே இப்படியா!

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படம் மூலமாக இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இவரது இசைக்கு தனி ரசிகர்கள் இருப்பது போலவே, இவரது படங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, தனது நடிப்பில் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனி, இந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் காளி படத்தோடு ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

vijay-antony-cinemapettai
vijay-antony-cinemapettai

விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும். திரைப்படம் என்ற போர்வையில், இந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக, மதநல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில், போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

இந்து கடவுள்களை பயன்படுத்துவது போல, மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு, ‘பிச்சைக்காரன் 2’ என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா? என கூறியுள்ளார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் எழுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சிலர் இந்த எதிர்ப்புகளை தங்களது படத்தின் பிரமோஷனாக மாற்றி விடுகின்றனர்.

- Advertisement -