ஒரே வீடியோவில் சோசியல் மீடியாவை கதறவிட்ட விஜய் ஆண்டனி.. மனுஷன் வேற லெவல்

இன்னைக்கு டிவிட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் டிரெண்டிங்கில் உள்ளார். காரணம் அவர் பேசிய அந்த வீடியோ. திரைப்படங்களை விமர்சனம் செய்யும் நபர்கள் குறித்தும் ஒரு படத்திற்கு எப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் விஜய் ஆண்டனி பேசியுள்ள வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜய் ஆண்டனி கூறியதாவது, “படங்களை விமர்சனம் பண்ணலாம். ஆனால் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செய்தால் நன்றாக இருக்கும். ஒரு மாணவன் பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் அதை ஊரை கூட்டி சொல்வோமா?

அவரவர் அறிவிற்கு எட்டியதை அவரவர் செய்கிறார்கள். நீங்கள் பெரிய புத்திசாலியாகவோ அதிமேதாவியாகவோ இருக்கலாம். ஆனால் உங்களை போல மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பது அவசியம். அவர்களுக்கு என்ன வருமோ என்ன தெரியுமோ அதை செய்கிறார்கள்.

ஒருவேளை சமூகத்திற்கு எதிராக ஏதேனும் படங்கள் எடுத்தாலோ அல்லது நீதி தவறும்போதோ நீங்கள் அவர்களை விமர்சிக்கலாம். காசு வாங்குனா எப்படி வேணாலும் நடிப்பியானு கேட்கலாம். அது தவறில்லை. எனவே விமர்சனம் பண்ணலாம் அதை சற்று மனிதாபிமானத்தோடு பண்ணுங்கள் என்று தான் சொல்கிறேன்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. முன்னதாக இந்த வீடியோவை பார்த்துவிட்டு விஜய் ஆண்டனியை இயக்குனர் சேரன் பாராட்டி இருந்த நிலையில், தற்போது நடிகர் சாந்தனு பாக்யராஜும் விஜய் ஆண்டனியை பாராட்டி உள்ளார். இதுகுறித்து மிக அருமையாக சொன்னீர்கள் பிரதர் என சாந்தனு டிவிட் செய்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் இந்த பேச்சுக்கு சேரன், சாந்தனு தவிர மேலும் பல திரைபிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் சமீபகாலமாக விமர்சனம் என்ற பெயரில் நிறைய பேர் அத்துமீறி வருகிறார்கள். அதனால் விஜய் ஆண்டனியின் இந்த பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்