பின்னி பெடலெடுக்கும் எஸ் ஜே சூர்யா.. அவசரமா விக்ரம் போட்ட ஆர்டர்

Vikram: விக்ரம் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆதித்ய கரிகாலனாக மக்கள் அவரை திரையில் பார்த்தது. அதன் பின் ஒரு வருடமாய் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஐந்தாறு வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு இவர் நடித்த மகான், கோப்ரா போன்ற படங்கள் பெரிய அடியாய் அமைந்தது. கடைசியாக விக்ரமுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த படம் சங்கர் இயக்கத்தில் வந்த “ஐ” படம் தான்.

தொடர்ந்து 8 படங்களுக்கு மேல் தோல்வியை சந்தித்த விக்ரம்

10 Endrathukulla
Iru Mugan
Sketch
Saamy Square
Kadaram Kondan
Adithya Varma
Mahaan
Cobra

வேற லெவலில் SJ சூர்யா ஆடப் போகும் ஆட்டம்

5 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு இப்பொழுது பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் இப்பொழுது ரசிகர்களை திருப்தி படுத்துமா என்பது கேள்விக்குறிதான்.

விக்ரம் இப்பொழுது அருண் குமார் இயக்கும் வீர தீர சூரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். விக்ரம் போலவே எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இந்த படத்தில் மாஸ் ரோல். எஸ் ஜே சூர்யா கதாபாத்திரம் கடைசி வரை மாஸ் இறங்காமல் இருக்க வேண்டும் என விக்ரம் கூறிவிட்டாராம்.

ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கூட மாஸ் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விஜய் கூறியிருந்தார் அதேபோலவே இப்பொழுது எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் விக்ரம், எஸ் ஜே சூர்யா கதாபாத்திரத்தை, வீரதீர சூரன் படத்தில் தூக்கி நிறுத்தும்படி சொல்லி இருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகிக் கொண்டிருக்கும் 6 படங்கள்

Saripodhaa Sanivaaram
Indian 2
Game Changer
Raayan
Love Insurance Corporation
Veera Dheera Sooran
- Advertisement -