படத்தின் வெற்றிக்கு காரணம் இதுதான்.. விஜய் மற்றும் விஜய் சேதுபதி பற்றி கூறிய லோகேஷ்

ஒரு மனுஷனால தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக விக்ரம் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது.

இதனால் எங்கு பார்த்தாலும் லோகேஷ் மயமாக தான் உள்ளது. ஊடகங்கள், யூடியூப் என எல்லா பக்கமும் லோக்கேஷின் பேட்டியை தான் சமீபகாலமாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு லோகேஷ் பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அந்தப் பேட்டியாளர் உங்களது படத்தில் ஹீரோக்களின் தலையீடு இருந்து உள்ளதா என கேட்டிருந்தார். ஏனென்றால் ஒவ்வொரு ஹீரோக்களும் தங்களுக்கு ஏற்றவாறு சிலவற்றை கற்பனை செய்து வைத்துள்ளனர். அதனால் இயக்குனர்களிடம் இந்த காட்சி இப்படித்தான் இருக்கவேண்டும் என கூறுவார்கள்.

அவ்வாறு உங்களுக்கு நடந்துள்ளதா என லோகேஷியிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் தன்னுடைய முதல் படத்திலிருந்து விக்ரம் படம் வரை யாரும் என்னிடம் இதுபோன்று கேட்டதில்லை என பதிலளித்தார். இதற்கு உதாரணமாக நாம் மாஸ்டர் படத்தை எடுத்துக்கொள்ளலாம்.

மாஸ்டர் படத்தில் விஜய் குடித்துவிட்டு தள்ளாடி வருவது போன்ற காட்சி இருக்கும். எல்லா ஹீரோக்களும் அதில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் அதில் நடிக்க சம்மதித்தார். அதேபோல் ஹீரோவாக கொடிகட்டி பறக்கும் விஜய் சேதுபதி ஒரு கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதித்ததால் தான் மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதே போல் விக்ரம் படத்திலும் கமல் தன்னுடைய இயக்கத்தில் எந்த ஒரு விஷயத்திலும் தலையிட வில்லை என லோகேஷ் கூறியுள்ளார்.