ரொமான்ஸுக்காக 15 மணி நேரம் தவம் கிடந்த இயக்குனர்.. பொறுப்பில்லாமல் தூங்கிய விஜய், த்ரிஷா

விஜய், த்ரிஷா இருவரும் கோலிவுட் திரையுலகில் சிறந்த திரை ஜோடிகள் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்களுடைய ஜோடி பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். அதனாலேயே இவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்தனர்.

ஆனால் இடையில் புதுப்புது நாயகிகளின் வரவால் திரிஷா கொஞ்சம் ஓரம் கட்டப்பட்டார். அந்த இடைவெளியில் விஜய்க்கு ஏற்ற ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய நடிகைகள் மாறினார்கள். இருப்பினும் த்ரிஷாவுடன் அவர் இணைந்து நடித்த படங்களுக்கு இப்போதும் மவுசு இருக்கிறது.

Also read: லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி

அந்த வகையில் இந்த ஜோடி 14 வருடம் கழித்து இப்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. அதனாலேயே படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சகட்டமாக இருக்கிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தில் ஒரு ரொமான்ஸ் காட்சியின் போது விஜய், திரிஷா இருவரும் தூங்கி வழிந்த சம்பவம் தற்போது பலரையும் வியப்பாக்கி இருக்கிறது.

தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விஜய்க்கு மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் திரிஷாவின் நடிப்பும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இவர்களின் கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதனாலேயே அடுத்தடுத்த திரைப்படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்தனர்.

Also read: ஹைதராபாத்தை விட்டு விரட்டப்பட்ட திரிஷா.. லிவிங் ரிலேஷன்ஷிப்பால் பயந்து போன திரையுலகம்

அந்த வகையில் இப்படத்தில் கலங்கரை விளக்கத்தின் மீது விஜய், த்ரிஷா இருவரும் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது விஜய் குளிர் அதிகம் எடுப்பதால் திரிஷாவின் ஷாலை வாங்கி போர்த்திக் கொண்டு படுத்திருப்பார். இந்த காட்சியை எடுப்பதற்கு இயக்குனர் 15 மணி நேரம் கஷ்டப்பட்டாராம். ஏனென்றால் இரவு 2 மணிக்கு தான் அந்த காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பிருந்தே பட குழு அதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கடைசியில் ஷாட் எடுக்கும் போது நள்ளிரவு என்பதால் விஜய், திரிஷா இருவரும் அங்கேயே தூங்கி வழிந்தபடி இருந்திருக்கிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அவர்களை செல்லமாக கடிந்து கொண்டாராம். அதன் பிறகு ஒரு வழியாக அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி திரைக்குப் பின்னால் பல கஷ்டங்கள் இருந்தாலும் படத்தில் பார்க்கும் போது அந்த காட்சி நன்றாக இருந்ததாக திரிஷா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Also read: விரக்தியிலிருந்து மீண்டு வந்த விஜய் டிவி நடிகர்.. பாலா, புகழ் போன்றவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த காமெடியன்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை