100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்றது விஜய் மக்கள் இயக்கம் தான்.. போட்டுக்கொடுத்த தளபதி தந்தை

ஏற்கனவே மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகி தியேட்டர்காரர்கள் சரியான முறையில் தயாரிப்பாளர்களுக்கு செட்டில் செய்யாத பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய்யின் தந்தை சந்திரசேகர் தேவையில்லாமல் விஜய்யின் மீது பழிபோடுவது விஜய்க்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். எதிர்பார்த்ததை விட நன்றாகவே வசூல் செய்ததாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் விஜய்யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தனர்.

ஆனால் டிக்கெட் விலை அதிகம் வைத்து விற்று லாபம் பார்த்த தியேட்டர்காரர்கள் முறையாக தயாரிப்பாளருக்கு செட்டில் செய்ய வில்லையாம். இதனால் லலித்குமார் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதனை புரிந்து கொண்ட விஜய் அமேசான் தளத்தில் கொடுத்து விடுங்கள் எனக் கூறியதன் அடிப்படையில் வருகிற 29-ஆம் தேதி அமேசான் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் 240 நாடுகளில் வெளியாக உள்ளது.

கொஞ்ச நாளைக்கு முன்னால் வரை விஜய்யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அதே தியேட்டர்காரர்கள் இன்று விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் நல்ல வசூல் செய்ததாக சொன்ன மாஸ்டர் படம், தற்போது வசூல் செய்யவில்லை என அப்படியே பிளேட்டை திருப்பிப் போட்டு விட்டனர்.

இந்த பிரச்சனை விஜய்யை வெகுவாக பாதித்த நிலையில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் அவரது பங்குக்கு தமிழகத்தில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் உள்ள டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்கம் மொத்தமாக வாங்கி அதை ஆயிரம் இரண்டாயிரத்துக்கு விற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

vijay-sac-cinemapettai-01
vijay-sac-cinemapettai-01

விஜய், தந்தை சந்திரசேகரின் ஆசைப்படி அரசியலில் நுழையாமல் இருப்பதே அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அப்பாவும் மகனும் மாறி மாறி தங்களுக்குள் பிரச்சனை செய்து கொள்வது பார்ப்பவர்களுக்கு செம வேடிக்கையாக உள்ளது. இதன் மூலம் இன்னும் பல உண்மைகள் வெளி வரவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்