தளபதியை திட்டிய அஜித் வெற்றி பட இயக்குனர்.. 15 வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை

அஜித்தை வைத்து முதல் படமான காதல் மன்னன் மற்றும் அமர்க்களம், அட்டகாசம் போன்ற பல படங்களை இயக்கியர் சரண். சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை சிறுவயதிலே திட்டியதாக கூறியுள்ளார். ஆனால் எதற்காக திட்டினேன் என்ன காரணத்திற்காக திட்டினேன் என்பதை அவரே கூறியுள்ளார்.

சரண் அசோசியேட் டைரக்டராக பல படங்கள் இயக்கியுள்ளார். சிகரம் படத்திற்காக விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் வீட்டில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார். அப்போது படத்தின் காட்சிக்காக ஒவ்வொரு அறைக்கும் சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.

அப்போது ஒரு ரூமில் தூங்கி கொண்டிருந்த விஜய்யை எழுப்பி நீங்கள் வேறொரு ரூமுக்கு செல்லுங்கள் நாங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்துகிறோம் என கூறியுள்ளார். அப்போது விஜய் டீனேஜ் என்பதால் எதுவும் சொல்லாமல் மற்றொரு ரூமிற்கு போய் சென்று தூங்கியுள்ளார்.

saran
saran

மீண்டும் சரண் விஜய் தூங்கிய அறைக்கு சென்று நாங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்துகிறோம் நீங்கள் மற்றொரு ரூமுக்கு செல்லுங்கள் என விஜய்யை எழுப்பி ஒவ்வொரு ரூமாக அலைக்கழித்து உள்ளார் . அப்போது விஜய் சிறு வயது என்பதால் சரணை  பார்த்து முறைத்தபடியே சென்று விடுவார் என சரண் பிரபல பேட்டியில் பெருமையாக கூறியுள்ளார்.

இயக்குனராக உருவான பிறகு அஜித் வைத்து நான் பல படங்கள் இயக்கி உள்ளேன். அப்போது விஜய்யின் படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் என்பதால் நானும் அஜித்தும் ஒன்றாக சென்று விஜய்யின் படத்தை பார்த்து ரசித்து உள்ளோம்.

மேலும் விஜய்யின் நடிப்பை பற்றி அஜித்தே பலமுறை பெருமையாகக் பேசியதாக பிரபல ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்