புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இண்டஸ்ட்ரியலை யாருக்கும் விட்டுக் கொடுக்காத விஜய் அஜித்.. மற்றவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இரு தூண்கள்

Vijay and Ajith: என்னதான் பல நடிகர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்களின் ஃபேவரைட் நடிகராக வந்தாலும், சினிமாவே எங்கள் கையில் தான் இருக்கிறது என்ற நினைப்பில் விஜய், அஜித் இருவரும் இண்டஸ்ட்ரியலை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி தான் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை இவர்கள் பக்கம் தக்க வைத்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் எங்கு திரும்பினாலும் யாரை கேட்டாலும் விஜய், அஜித் டாபிக் தான் பட்டிமன்றம் ஆக பேசப்பட்டு வருகிறது. அதே மாதிரி இவர்கள் நடிக்கும் படங்களுக்கு இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிக ஹைப்பை ஏற்படுத்தி பெரிய ஆளாக தூக்கி வருகிறார்கள். அதனாலேயே தமிழ் சினிமாவில் இவர்கள் இருவருடைய மார்க்கெட் தலை தூக்கி நிற்கிறது.

அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே லியோ படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அறிவித்து விட்டார்கள். இந்நிலையில் தற்போது அஜித்தின் 63வது படத்திற்கான அறிவிப்பை அன்றைக்கு தான் அபிசியல் ஆக அறிவிக்கப் போகிறார்கள்.

ஏற்கனவே இந்த வருடம் பொங்கல் தினத்தை ஒட்டி துணிவு மற்றும் வாரிசு ஒன்றாக ரிலீசாகி பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் பொழுது மறுபடியும் விஜய்யின் லியோ ரிலீஸ் அன்று அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்து மற்றவர்கள் யாரையும் நடுவில் வராதபடி இவர்கள் இருவரும் தான் ஆக்கிரமிக்க போகிறார்கள்.

அத்துடன் சமூக வலைதளங்களில் லியோ தான் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது. அதே மாதிரி ரிலீஸ் அன்றும் ஹாட் டாபிக்காக லியோ படத்தின் ரிவ்யூ தான் போகும். இதை தடுத்து முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதற்காக அஜித் அவருடைய அடுத்த படத்தை அறிவிக்கிறார். இன்னொரு விதத்தில் இவர்கள் என்னதான் போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும் கமுக்கமாக இவர்கள் பேசி வச்சு தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால் இவர்களுக்கு இடையில் வேறு யாரும் வந்து விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காக இந்த மாதிரியான வேலைகளை பக்கவாக செய்து வருகிறார்கள். சும்மாவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு அலப்பறையை கூட்டுவார்கள். இன்னும் அக்டோபர் 19ஆம் தேதி அன்று என்னவெல்லாம் சம்பவம் நடக்க இருக்கிறதோ. ஆக மொத்தத்தில் நல்ல கொளுத்தி போட்டு குளிர் காய்கிறார்கள்.

- Advertisement -

Trending News