நேருக்கு நேராக சந்திக்கப்போகும் தல அஜித், விஜய்.. என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் மற்றும் அஜீத் குமார் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் பெருவாரியான ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அஜித் குமார் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இவர் இருவரும் தங்களது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய் ஜார்ஜியாவில் பயங்கரமான சண்டை காட்சிகளை படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள பெரிய ஸ்டூடியோ ஒன்றில் பாடல் காட்சிகளை எடுத்து வருகின்றனர். அதேபோல் அஜித் குமார் ஸ்பெயின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ajith-vijay-cinemapettai
ajith-vijay-cinemapettai

தற்போது இவர்களது இருவர் படங்களின் முக்கியமான சண்டைக்காட்சி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் விஜய் முக்கியமான சண்டைக்காட்சிகளை ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அதேபோல் அஜித் குமார் முக்கியமான சண்டைக்காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக தற்போது அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்.

தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் ஒரே நாட்டில் விஜய் மற்றும் அஜீத்தின் படப்பிடிப்புகள் நடத்த உள்ளனர். படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தால் கண்டிப்பாக விஜய்-அஜித் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்த செய்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -