வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் பத்தாது என்று சூப்பர் ஸ்டார் ரேஸுக்கு வந்த அடுத்த நடிகர்.. ரஜினிக்கு வந்த பெரிய சோதனை

சமீப காலமாகவே யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் தளபதி விஜய்யின் பெயர்தான் அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், அந்த ரேசில் இப்போது இன்னொரு நடிகரும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே அந்த டைட்டிலின் மீது அந்த நடிகருக்கு ஒரு கண்ணு இருந்து வந்த நிலையில், தற்போது அது பெரிய கண்ணாக மாறிவிட்டது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு தன்னை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் ரஜினிக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை கேட்ட பின் நடிக்க தயங்கிய படத்தில், சவாலாக நடித்து முடித்து தற்போது மாஸ் காட்டி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்த லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் பத்து தல இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: பத்து தல சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றியா.. இது பத்து தலயா இல்ல பாதி தலையா.? முழு விமர்சனம்

இவருக்கு ஏற்கனவே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் இருந்த நிலையில், இந்த படத்தில் 50 வயது கெட்டப்பில் தன்னுடைய நடை, உடை, டயலாக் மூலம் மணல் மாஃபியா ஏஜிஆர் ஆக மிரட்டி விட்டுள்ளார். இதனால் எனக்கு கொடுத்த லிட்டில் சூப்பர் ஸ்டார் டைட்டிலில் இருந்து லிட்டில் என்பதை கட் பண்ணி விடுங்கள் என்று அடம் பிடிக்கிறார். அது மட்டுமல்ல இனிமேல் பழையபடி எல்லாம் நான் இருக்க மாட்டேன். இப்போ வேற மாதிரி வெறித்தனமா வந்திருக்கிறேன் என பத்து தல படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலேயே உணர்ச்சிப்பூர்வமாக பேசி ரசிகர்களை வெறியேற்றினார்.

அதற்கு தீனி போடும் விதமாக தான் பத்து தல படமும் அமைந்திருக்கிறது. இப்போது சினிமாவில் வெறித்தனமாக களம் இறங்கிய சிம்பு, ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டிலை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று அடுத்தடுத்த செயல்களை அரங்கேற்றி வருகிறார். ஏற்கனவே ரஜினியின் டைட்டிலுக்கு விஜய் வெகுகாலமாக போட்டி போட்டு வரும் நிலையில், அவருக்கு போட்டியாக அடுத்ததாக களம் இறங்கிவிட்டார் சிம்பு.

Also Read: ஏஜிஆர்-ஆக மிரட்டும் சிம்பு.. அனல் பறக்கும் பத்து தல ட்விட்டர் விமர்சனம்

இவர் எப்படியாவது முன்னணி நடிகராக மாற வேண்டும் என சிறு வயது முதலே போராடி வரும் நிலையில், பல வருடங்களாக முயற்சி செய்தும் முடியாமல் போனது. ஆனால் சமீப காலமாக அந்த இடத்தை பிடித்து விட தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதால், கோலிவுட்டில் பெரும் புயலே வீசுகிறது.

இப்படி திடீரென்று இன்னொரு கொடுக்கு ஒன்று, நமக்கு எதிராக முளைத்திருக்கிறது என ரஜினியை விட விஜய் தான் சிம்புவின் அதிரடியான செயல்களை பார்த்து டென்ஷன் ஆகி உள்ளார். மறுபுறம் ரஜினியை போல நானும் மாற வேண்டும் என அவரது மகளையே திருமணம் செய்து கொண்ட தனுஷ் விவாகரத்து பெற்று ஒதுங்கிய நிலையில், அந்த கேப்பை பிடித்துக் கொண்டு தற்போது சிம்பு அடுத்த சூப்பர் ஸ்டார் பதவிக்கு அடி போட்டிருக்கிறார்.

Also Read: ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

- Advertisement -

Trending News