அப்போவே விஜயுடன் நடித்த பிரபல நடிகர்கள்.. இப்போ இவங்க எல்லாம் பெரிய ஸ்டார் ஆச்சே.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது தான் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். முன்பு தனக்கு நேரம் கிடைக்கும் பொழுது ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நண்பன் படம் வெளியான சமயத்தில் விஜய் நடித்த விளம்பரம் ஒன்று வெளியானது.

அந்த விளம்பரப் படத்தில் மலையாள சினிமாவில் நடிப்பு அரக்கனாக கொண்டாடப்படும் ஃபகத் பாசில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஃபகத் பாசில் மட்டுமல்லாமல் பிரபல நடிகை திஷா பதானி அந்த விளம்பரத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் பெரியளவில் அறிமுகம் கிடையாது என்பதால், அந்த விளம்பரம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து அதே விளம்பரம் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

vijay-cinemapettai
vijay-cinemapettai

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் பாசில் தற்போது தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமான நபராக மாறியுள்ளார். ஏற்கனவே தமிழில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்த இவர் தற்போது உலக நாயகன் கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் அந்த விளம்பரம் மூலம் தமிழில் அறிமுகமான திஷா பதானியை பாலிவுட் சினிமா பயன்படுத்திக் கொண்டது. இப்போது அவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளம் மற்றும் இந்தி சினிமாக்களில் கொண்டாடப்படும் நடிகர்கள் விஜய்யுடன் நடித்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -