கொல மாஸாக வெளியான பீஸ்ட் பட போஸ்டர்.. ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் ஏக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தெலுங்கு ஹிந்தி என அணைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.தொடர்ந்து இப்படத்தின் பற்றிய அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் செல்வராகவன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் பெரிய செட் போட்டு பாடல் காட்சியை எடுத்துள்ளனர்.

beast
beast

தற்போது விஜய் வைத்து சில சண்டை காட்சிகள் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதை படத்தின் இயக்குனர் நெல்சன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது விஜய் ஷூட்டிங் முடித்துவிட்டு கடற்கரை அறையில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது நடிகர் விஜய் அவரது சமூக வலைதள பக்கத்தில் டீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அப்டேட் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்