போன் காலில் வந்த விஜய்.. அனிருத் நெல்சன் சிவகார்த்திகேயன் என களைகட்டிய பீஸ்ட் அப்டேட்

இன்றைய தேதிக்கு படம் கூட எடுத்து விடலாம் ஆனால் அந்த படத்தை எப்படி புரமோஷன் செய்து மிகப்பெரிய படமாக மாற்றுவது என்பது தெரியாமல் தான் பல படங்கள் வந்த தடம் தெரியாமல் சென்றுவிடுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ப்ரமோஷன் என்றால் பொரிகடலை சாப்பிடும் மாதிரிதான்.

சுமாரான படத்தில் பக்காவாக புரமோஷன் செய்து எப்படியோ கல்லா கட்ட வைத்து விடுவார்கள். பெரிய நடிகர்கள் படம் என்றால் சும்மா இருப்பார்களா. மிகப்பெரிய வசூல் வேட்டைக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது விஜயின் பீஸ்ட் திரைப்படம்.

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தை ஒட்டி வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.\

இதற்கான புரமோஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு எப்படி புரமோஷன் செய்தார்களோ அதே போல்தான் இந்த படத்து பாடலுக்கான பிரமோஷனும் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன் ஆகியோருடன் போன் காலில் தளபதி விஜய் இணைந்து ஒரு கலகலப்பான வீடியோவை உருவாக்கி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டனர். இதோ அந்த வீடியோ:-

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்