தேடிப்போய் வாய்ப்பு கொடுத்த விஜய்.. வேலை இருக்கு, அப்புறம் பார்க்கலாம் என்ற இயக்குனர்

இன்றைய தேதிக்கு தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர். அப்படியிருக்கையில் விஜய் தானாக போய் வாய்ப்பு கொடுத்தும் என் வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று பிரபல இயக்குனர் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான்காம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறுகின்றனர். இன்னும் சில தினங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றே தெரிகிறது. மேலும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படம் கண்டிப்பாக விஜய்யின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்றே கருத்து கணிப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது அந்த படம் நடக்குமா எனுமளவுக்கு கோலிவுட்டில் ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி இருவரையும் வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணைய உள்ளார். வாடிவாசல் படத்திற்கும் முன்னரே தளபதி விஜய் வெற்றிமாறன் ஐ கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தது அனைவருக்குமே தெரியும். அசுரன் படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கேட்டதாகவும் அதற்கு வெற்றிமாறன் ஓகே சொன்னதாகவும் வெற்றிமாறனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

vijay-vetri-cinemapettai
vijay-vetri-cinemapettai

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு பேட்டி கொடுத்த வெற்றிமாறன் விஜய் சார் படம் என்னால்தான் தள்ளிக் கொண்டே செல்கிறது எனவும், ஒருமுறை விஜய் சார் போன் பண்ணி கேட்டபோது இப்போதைக்கு படம் நிறைய கைவசம் இருப்பதால் அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டதாகவும் அதற்கு விஜய் பொறுமையாக படத்தை முடித்துவிட்டு வாருங்கள் என்று சொன்னதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்